ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் நிதானத்தை இழக்க வேண்டாம்: ஜான் கெர்ரி

  • 27 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் நிதானத்தை இழக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

லண்டனுக்கு செல்வதற்குமுன் பிரஸ்ஸல்ஸ் சென்ற கெர்ரி, இந்த சமயத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் அல்லது மாற்றத்திற்கான நேரத்தின் போது கவலை அடைந்து சூழ்நிலையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே பெர்லினில் கூட்டம் நடைபெற உள்ள நிலையிலும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகள் குறித்து உலக தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பேச உள்ள நிலையிலும் கெர்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.