பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு குற்றங்கள்

பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு குற்றங்கள்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து நடந்த வெறுப்புக்குற்றங்கள் என்று அழைக்கப்படுபவை குறித்து பிரிட்டிஷ் காவல்துறையினர் புலனாய்வு செய்துவருகிறார்கள்.

ஹண்டிங்டனிலுள்ள போலந்து நாட்டைச் சேர்ந்தவர்களின் வீட்டுத் தபால் பெட்டிகளிலும் வேறு இடங்களிலும் "போலந்து புழுக்கள் தேவையில்லை" என்று எழுதப்பட்டிருந்த அட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவங்களை, பிரிட்டிஷ் அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்று, ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான போலந்து நாட்டின் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.