ஸ்பெயினில் ஒரு மாதத்திற்குள் கூட்டணி அரசை உருவாக்க முயல்வதாக தற்காலிகப் பிரதமர் அறிவிப்பு

தேர்தலுக்கு பிறகு தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளதால், ஒரு மாதத்திற்குள் கூட்டணி அரசை உருவாக்க முயல்வதாக ஸ்பெயினின் தற்காலிகப் பிரதமர் மரியானோ ராஜாய் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

ராஜாயின் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 137 இருக்கைகளை வென்றுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே முடிவுறாமல் தொடர்ந்த தேர்தல்களில் முன்னேறி வந்த முக்கிய ஒரே கட்சி இதுவாகும். ஆனால் இன்னும் அதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty

மையவாத, வர்த்தகத்திற்கு இணக்கமான சியுடடானோஸ் கட்சி ராஜாயை ஆதரிக்க கடந்த டிசம்பர் மாதத்தில் மறுத்துவிட்டது.

ஆனால் அதனுடைய தலைவர் ஆல்பர்ட் ரிவேரா இந்த நிலைமையை சுமுகமாக்கலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

சோசலிஸ்டு கட்சிகள் இந்த தேர்தலில் மேலும் இறங்குமுகம் கண்டுள்ளனர். இடதுசாரி போடெமோஸ் கட்சியும் எதிர்பார்ததைவிட குறைவாகவே வென்றிருந்தது