டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • 27 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AP

டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்கி அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு சட்டத்துக்கு குடியரசு கட்சி ஆதரவு அளித்திருந்த நிலையிலும், பெண்கள் தங்கள் ஜனநாயக ரீதியிலான உரிமையை நிலைநாட்டுவதற்கு இந்த சட்டம் தேவையற்ற சுமையாக இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு கருக்கலைப்பிற்கு ஆதரவான குழுக்களுக்கு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த சட்டமானது பெண்களின் ஆரோக்கியதை காக்க தேவையானது என டெக்சாஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், பல சோதனைக் கூடங்களுக்கு வர்த்தகம் இல்லாமல் செய்யும் முடிவு என அதை கருக்கலைப்புக்கு ஆதரவான குழுவினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.