ஆப்கன் போலிஸ் படையில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்: விசாரணைக்கு உத்தரவு

  • 28 ஜூன் 2016

ஆப்கானிஸ்தானில், போலிஸ் படையில் இருந்த சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை thinkstock

தென் மாகாணமான உருஸ்கானில், போலிஸார் அதிக அளவில் சிறுவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியதாக செய்தியாளர்கள் தெரிவித்ததையடுத்து, அவ்வாறு செய்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று அதிபர் உறுதியளித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை தாலிபான்கள் தங்கள் படையில் சேர்த்து அவர்களை போலிஸாரின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்துவதாக பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.