பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது - ஏங்கலா மெர்கல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது என்று ஜெர்மானிய சான்சிலர் ஏங்கலா மெர்கல் எச்சரித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவோர் சலுகைகளை பெற்றுவிட்டு, கடமைகளை கைவிட எதிர்பார்க்கக் கூடாது - ஏங்கலா மெர்கல்

ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்தை விட்டு விலக விரும்புவோர், சலுகைகளை வைத்து கொண்டு, எல்லா கடமைகளையும் கைவிட்டுவிட எதிர்பார்க்கக் கூடாது என்று அவர் கூறினர்.

படத்தின் காப்புரிமை REUTERS
Image caption விலகல் பேச்சுவார்த்தையை இன்றே தொடங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் தயார் - டஸ்க்

விலகுவதற்கான வழிமுறையை தொடங்குவது பிரிட்டனை சார்ந்ததாக இருந்தாலும், அதற்கான பேச்சுவார்த்தைகளை இன்றே தொடங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது என்று ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்திருக்கிறார்.