பிரிட்டனின் பொருளாதார நிலைப்பாட்டுக்கு மேலும் ஒரு அடி

  • 28 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் எடுத்த முடிவினை தொடர்ந்து, பிரிட்டனின் பொருளாதார நிலைப்பாட்டுக்கு ஒரு புதிய அடியாக, பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்களை, மேலும் இரண்டு கடன் மதிப்பீடு முகமைகள் குறைத்து மதிப்பீடு செய்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டனின் பொருளாதார நிலைப்பாட்டுக்கு மேலும் ஒரு அடி

கருத்தறியும் வாக்கெடுப்பின் பாதிப்பினால், பிரிட்டனின் பொது நிதி ஆதாரங்கள் மீது ஏற்பட்டுள்ள அச்சங்கள், தங்களின் மதிப்பீட்டை குறைத்திட தூண்டியதாக ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பிரிட்டனின் பொருளாதார நிலை மேலும் குறையக்கூடிய சாத்தியம் குறித்து ஸ்டாண்டர்ட் ஆண்ட் பூவர்ஸ் கடன் மதிப்பீடு முகமை நிறுவனம் எச்சரித்துள்ளது.

திங்கள்கிழமையன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து, ஆசிய பங்குச்சந்தை மீண்டும் சரிவில் தொடங்கியது.