விலகுவது பற்றி பிரி்ட்டன் வெகுவிரைவில் தெளிவுபடுத்த வேண்டும் - யுன்கர்

  • 28 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பற்றிய நிலைமையை பிரிட்டன் வெகுவிரைவில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஷான் கிளாடு யுன்கர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டன் விலகுவதற்கான வழிமுறையை வெகுவிரைவில் பிரயோகிக்க யுன்கர் வலியுறுத்தியுள்ளார்

பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான அவசர விவாதத்தின்போது அவர் பேசியுள்ளார்.

விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் முறையாக பிரயோகிக்காத வரை ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள் பிரிட்டன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தடை செய்யப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

பிரிட்டன் விலகுவதை ஆதரித்த முன்னணி அரசியல்வாதி நைஜல் ஃபராஜ் பேசிய போது உறுப்பினர்கள் கேலிக்கூச்சலை எழுப்பினார்கள்.

தங்களின் அரசியல் பணித்திட்டம் தோற்றுவிட்டதை மறுக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இருப்பதாக இரைச்சலுக்கு மத்தியில் பேசிய அவர் குற்றஞ்சாட்டினார்.

எந்தவொரு நாடாளுமன்றமும் ஒருபோதும் ஒரு பொருத்தமான பணியை செய்யவோ அல்லது உருவாக்கவோ இல்லை என்று அவர் கூறினார்.

அவருக்கு ஆதரவாக பேசிய பிரான்ஸ் தேசிய முன்னணியின் தலைவர் மரின் ல பென், பிரிட்டனின் இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பானது, பயம், அச்சுறுத்தல், பொய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருப்பதாக அவர் கூறிய ஐரோப்பிய அமைப்பின் முகத்தில் விழுந்த அறை என்று தெரிவித்தார்.