சஞ்சிகை ஆசிரியரை மன்னிப்பு கேட்கசொன்னது சீன நீதிமன்றம்

  • 28 ஜூன் 2016

இரண்டாம் உலகப் போர் குறித்த பிரபலமான செய்தி ஒன்றின் அதிகாரபூர்வமான வடிவத்தை கேள்வி கேட்டதற்காக முன்னாள் சஞ்சிகை ஆசிரியர் ஒருவரை சீனாவின் நீதி மன்றம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது படை எடுத்து வந்த ஜப்பானியப் படையினரால் பிடிபடாமல் இருக்க ஒரு மலை உச்சியில் இருந்து ஐந்து நபர்கள் குதித்துவிட்டனர் என்ற அந்த செய்தி குறித்து அந்த சஞ்சிகை ஆசிரியர் அவநம்பிக்கை வெளியிட்டார்.

லாங்யாசன் மலையின் ஐந்து வீரர்கள் (warriors of Mount Langyashan) என்று அறியப்படும் அவர்களின் புகழ் மற்றும் மரியாதையை அந்த முன்னாள் ஆசிரியர் கெடுத்துவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேச்சுரிமை என்பது எல்லைகள் இல்லாத ஒன்றல்ல என்று அந்த நீதிமன்றம் கூறியது. அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சியின் கீழ் சீனாவில் தணிக்கை முறை அதிகரித்துள்ளது.