கார்பைன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிக எம்.பி.க்கள் ஆதரவு

  • 28 ஜூன் 2016

பிரிட்டனின் பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் 170-க்கு மேலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை ITN POOL
Image caption கார்பைன் மீதா நம்பிக்கையில்லா தீாமானம் அவரை கட்டுபடுத்தாது

நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு மந்தமான ஆதரவை கார்பைன் வழங்கியதாக பலர் அவரை விமர்சிப்பதோடு, பிரதமர் பதவிக்கு அவர் பலவீனமான நபர் என்று கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கார்பைனுக்கு எதிரானோர் தனி போட்டியாளராக நிறுத்த எண்ணும் டாம் வாட்சன்

கட்சியின் இந்த வாக்கெடுப்பு கார்பைன் கட்சியின் தலைவராக தொடர்வதை கட்டுப்படுத்தாது. அவரே தலைவராக தொடரலாம்..

துணை தலைவராக இருக்கும் டாம் வாட்சனை வைத்து தனி போட்டியாளரை ஆதரிப்பதா அல்லது எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஏஞ்சலா ஈகி முன்னிறுத்துவதா என்று கார்பைனுக்கு எதிரானவர்கள் கலந்தாய்வு நடத்தி வருகிறார்கள்.

Image caption கார்பைனுக்கு எதிரானவர்கள் கருத்தில் கொள்ளும் ஏஞ்சலா ஈகிள்

நாட்டின் தொழிற்கட்சி ஆதரவாளர்களின் மத்தியில் கார்பைன் இன்னும் வலுவான ஆதரவு பெற்றிருப்பதாக அவரை ஆதரிப்போர் கூறுகின்றனர்.

தொழிற்கட்சியின் சட்டப்படி, கட்சியின் ஆதரவாளர்கள் தான் யார் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் இறுதி முடிவு எடுப்பர்.