ஈஜிப்ட் ஏர் விமானத் தரவு பதிவு கருவியின் பழுதை நீக்கிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு.

  • 28 ஜூன் 2016

கடந்த மாதம் கடலில் விழுந்து, அதில் பயணம் மேற்கொண்ட 66 பேரையும் பலி வாங்கிய ஈஜிப்ட் ஏர் விமானத்தின் தரவு பதிவு கருவியில் இருந்த பழுதை ஆய்வாளர்கள் நீக்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை ATSB BBC
Image caption தரவு பதிவு கருவியில் பழுதை நீக்கியிருப்பது, விபத்திற்கான காரணத்தை கண்டறியும் தரவுகளில் ஆய்வு நடத்த வழி ஏற்படுத்தியுள்ளது

மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் இந்த விமானம் விழுந்ததற்கான காரணத்தை விவரிக்கக்கூடிய தரவுகளை, நிபுணர்கள் ஆய்வு செய்ய இது வழி ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில மணிநேரங்களில் விமானிகள் அறையின் ஒலிப்பதிவு கருவியில் ஆய்வுப் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஒலிப்பதிவு கருவிகளில் பழுதுகள் முற்றிலும் நீக்கப்பட்ட பின்னர், தரவுகளை ஆராய அவை கெய்ரோவுக்கு அனுப்படும்

இந்த ஒலிப்பதிவு கருவிகளில் இருந்த உப்புப் படிவுகளை அகற்றுவதற்காக அவை திங்கட்கிழமை கெய்ரோவிலிருந்து பாரிஸ் கொண்டு வரப்பட்டன.

பழுதுகள் முழுமையாக நீக்கப்பட்டவுடன் தரவுகள் ஆய்வு செய்யப்பட அவை கெய்ரோவிலுள்ள ஓர் ஆய்வகத்திற்கு திருப்பி அனுப்பப்படும்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஈஜ்பிட் ஏர் விமான விபத்தில் மனிதக் கொலை புலன் விசாரணையை பிரான்ஸ் தொடங்கியுள்ளது

முன்னதாக, இந்த விமான விபத்தில் மனிதக் கொலை புலன்விசாரணை ஒன்றை பிரெஞ்சு நீதித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த விமான விபத்தையும் தீவிரவாதச் செயலையும் இணைக்கக்கூடிய சான்று எதுவும் இதுவரை இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.