பிரிட்டன் பற்றி அதீத உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடுகள் தேவையில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்காக வாக்களித்தை அதீத உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடுகள் தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

நேஷனல் பப்லிக் ரேடியோ என்ற வானொலிக்கு ஒபாமா அளித்த பேட்டியில், ஏதோ நேட்டோவே அழிந்துவிட்ட்து போலவும், அட்லாண்டிக்கு அப்பால் இரு புறமும் உள்ள நாடுகளின் கூட்டணி கரைந்து வருவது போலவும்,ஒவ்வொரு நாடும் அதனதன் மூலைக்கே ஓடிக்கொண்டிருப்பது போலவும், கொஞ்சம் அதீத உணர்வு நிலவுகிறது ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்றார்.

அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைவதில் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டுள்ளது , ஆனால் பெரிய அளவில் பிரளயம் ஏற்பட சாத்தியமில்லை என்றார் ஒபாமா.