சீனாவில் ஜின் ஜின் பாண்டா பிரசவித்த குட்டிகள்

சீனாவில் ஜின் ஜின் பாண்டா பிரசவித்த குட்டிகள்

சீனப் பிராந்தியத்தில் முதன் முறையாக மக்கௌ என்ற இடத்தில் ராட்சத பாண்டா இரட்டை ஆண் பாண்டாக்களை பிரசவித்தது.

ஜின் ஜின் என்ற பாண்டா இரண்டு ஆண் குட்டிகளை கடந்த ஞாயிறு மதியம் பாண்டாக்களுக்கான காப்பகத்தில் ஈன்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய் பாண்டாவும், பெரிய குட்டியும் நல்ல ஆரோக்கியதுடன் உள்ளன. ஆனால் சிறிய குட்டி எடை குறைவாக உள்ளதால் அவரச சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்து செல்லப்பட்டது.

ஜின் ஜின் பாண்டாவும் அதன் இணையான கைக்கையும் பரிசாக கடந்த வருடம் சீன பெருநிலப்பரப்பில் இருந்து மக்கௌவிற்கு வந்தன.

அவை இயற்கையாக உறவு கொண்டன என்று அரசு செய்தி தொடர்பாளர் பி பி பி சியிடம் தெரிவித்தார். ஆனால் கைக்கையின் விந்துகளை கொண்டு ஜின் ஜினுக்கு செயற்கை முறையிலும் கருத்தரிக்கப்பட்டது.

பெரிய குட்டி 138 கிராம் அளவில் உள்ளூர் நேரப்படி 15:45க்கு பிறந்தது. (08:45 ஜி எம்.டி). சிறிய குட்டி வெறும் 53.8கிராம் அளவில் உள்ளூர் நேரத்தில் 16:27க்கு பிறந்தது

ஜின் ஜின் பிரசவத்திற்கு தயாராவதால், பாண்டா காப்பகம் ஜூன் மாதம் 14ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது.