சோவியத் நினைவு சின்னங்களை வைக்க போலந்தில் புதிய அருங்காட்சியகம்

  • 28 ஜூன் 2016

இரண்டாம் உலகப்போரின் இறுதியில், சோவியத் ராணுவத்தின் உதவியோடு விடுதலை பெற்றதை நினைவு கூறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களை, போலந்து சிறப்பாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் வைக்கவுள்ளது.

போலந்தில் இருந்து நாஜிக்களை வெளியேற்றிய செஞ்சேனையின் முக்கிய பங்கை பெருமைபடுத்தும் விதத்தில் இந்த சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தன..

ஆனால் போலந்து மக்கள் பலர் இந்த செஞ்சேனையின் பங்கு, நான்கு தசாப்தங்களாக சோவியத்தால் உந்தப்பட்ட கம்யூனிசத்திற்கு வழிவகுத்தது என்று கூறுகிறார்கள். மற்றும் அந்த சின்னங்கள் முழுமையான வரலாற்று சூழலோடு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

வடமேற்கு போலாந்தில் முன்னாள் சோவியத் ராணுவ தளமாக இருந்த இடத்தில் திறந்த வெளி அருங்காட்சியம் அமைக்கப்படும்.

பி பி சி செய்தியாளர் கூறுகையில், இந்த திட்டம் ரஷியாவை கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்படுவதால், அது ரஷியாவை கோபப்படுத்துவதாக இருக்கலாம் என்றார்.