தான்சானியாவில் ஹீலியம் வாயு பெருமளவு கண்டுபிடிப்பு

  • 28 ஜூன் 2016

டான்சானியாவில், உலகத் தர ஹீலியம் வாயு உள்ள பகுதியை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த கொதிநிலையை கொண்ட ஹீலியத்திற்கு பல பயன்பாடுகள் உண்டு அதில் முக்கியமானது, எம் ஆர் ஐ ஸ்கேனர், அணு சக்தி மற்றும் வாயு கசிவுகளை கண்டறிதல் ஆகும்.

உலக அளவில் ஹீலியத்தின் விநியோகம் குறைந்து கொண்டு வருகிறது என்ற அச்சம் இருந்தது.

பிரிட்டனில் உள்ள இரண்டு பல்கலைகழகங்கள் ஆக்ஸ்போர்டு, டுர்ஹாம் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகிய உறுப்பினர்களைக் கொண்ட குழு, இந்த மிகப்பெரிய கண்டுப்பிடிப்பை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் ஏறத்தாழ 54 பில்லியன் கன அடி ஹீலியம் ஒரே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1.1 மில்லியன் எம் ஆர் ஐ ஸ்கேனர்களுக்கு அது போதுமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.