துருக்கி மன்னிப்பு கேட்டிருப்பது இரு நாட்டு உறவுகள் மேம்பட முக்கிய படி - புதினின் பேச்சாளர்

கடந்த ஆண்டு ரஷியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்திற்கு, துருக்கி மன்னிப்பு கேட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையில் உறவுகள் மேம்படுவதற்கு முக்கிய படி என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption துருக்கி மன்னிப்பு கேட்டிருப்பது துருக்கி-ரஷிய உறவு மேம்பட வாய்ப்பை உருவாக்கியுள்ளது

திங்கட்கிழமை அன்று இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை துருக்கி முறையாக அறிவித்தது.

புதன்கிழமை ரஷியத் தலைவர் புதின், துருக்கி அதிபர் எர்துவானோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவார் என்று புதினின் பேச்சாளார் கூறினார்.

ஆனால் முறுகலடைந்த உறவுகளை சில நாட்களில் சரிசெய்வது சாத்தியப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, பொருளாதார சேதம் விளைவிக்கும் தடைகளை துருக்கி மீது ரஷியா விதித்திருந்தது.