ராஜிய அலுவலர்களுக்கு ரஷிய பாதுகாப்புப் பிரிவினர் கொடுக்கும் தொல்லை அதிகரிப்பு

மாஸ்கோவிலுள்ள அமெரிக்க மற்றும் பிற மேற்குலக ராஜிய அலுவலர்களுக்கு ரஷிய பாதுகாப்புப் பிரிவினர் தொல்லை கொடுப்பது அதிகரித்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்க மற்றும் மேற்குல ராஜிய அலுவலர்களுக்கு ரஷியப் பாதுகாப்பு ப் பிரிவினர் அதிக தொல்லை கொடுப்பதாக சர்ச்சை

ராஜிய அலுவலர்கள் மத்தியில் நிலவிய அதிக கவலைகளை அடுத்து, அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி, ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாகவே இந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை பேச்சாளர் எலிசபெத் ட்ருதெவ் அம்மையார் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜான் கெர்ரி இந்த பிரச்சனையை புதினின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளளார்

அவர் எவ்வித விபரங்களையும் வெளியிடவில்லை.

ஆனால், தூதரக ஊழியர்களின் வீடுகளை உடைத்து நுழைதல், வீட்டின் மரச்சாதனங்களை மாற்றி அமைத்தல் மற்றும் ஒரு செல்லப் பிராணியை கொன்றது போன்றவற்றில் ரஷியப் பாதுகாப்பு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரஷியா அதிகாரபூர்வமாக இன்னும் பதிலளிக்கவில்லை.