ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை பிரிட்டன் மதிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எச்சரிக்கை

  • 29 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை அணுகும் உரிமையைத் தக்க வைக்க பிரிட்டன் விரும்பினால், ஒன்றியத்தின் மக்கள் தங்குதடையின்றி சென்றுவர வழிவகை செய்யும் கொள்கையை பிரிட்டன் மதிக்க வேண்டியது கட்டாயம் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்

பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரிட்டன் தனக்கு தேவையானதை தானே எடுத்துக் கொள்ளும் ''அ லா கார்ட்'' மெனு பாணியினை கடைபிடிக்க முடியாது என்று கூறினார்.

சந்தை, பொருட்கள், மக்கள் மற்றும் மூலதனம் குறித்த நான்கு சுதந்திர சுழற்சிகளை பிரிட்டன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவினை பிரிட்டன் எடுத்த பிறகு நிலவும் நிலையில்லாத் தன்மை காலத்தை கட்டுப்படுத்த ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் பிரிட்டனை வலியுறுத்தியுள்ளார்.