பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய கூட்டம்: வாக்கெடுப்பின் எதிரொலி

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரிட்டன் வாக்களித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திலிருந்து பிரிட்டன் விலக்கப்பட உள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, முதல்முறையாக இவ்வாறு நடக்கவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்தன் தாக்கத்தை பற்றி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பின நாடுகளின் தலைவர்கள் விவரிக்கும் கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் கலந்து கொள்ளமாட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நடைமுறைகளுக்கான திட்டத்தை உடனடியாக பிரிட்டன் வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான சட்டரீதியான நடைமுறைகள் குறித்த பேச்சுவார்த்தையை, புதிய பிரதமர் பதவியேற்ற சீக்கிரத்தில் நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் க்லவுட் ஜன்கர் தெரிவித்துள்ளார்.