பொது அமைதியைக் குலைத்ததற்காக பட இயக்குனர் சீனாவில் கைது

பொது அமைதியைக் குலைத்ததற்காக சர்வதேச அளவில் பிரபலமான திபெத்தியப் பட இயக்குனர் ஒருவரை சீனப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் மேற்கு மாகாணமான சிங்காயில் உள்ள க்ஷிணிங் விமான நிலையத்தில் தனது பயண மூட்டைகளை சேகரித்துக்கொண்டிருந்தபோது, இயக்குனர் பெம்மா செடன் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர் தற்போது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் பட இயக்குனர்கள் சங்கம் பெம்மா செடன் கைது செய்யப்பட்டது குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

பெம்மா செடன் தன் படங்களில் திபெத்திய வாழ்க்கையை சித்தரித்ததற்காக சீனா மற்றும் வெளிநாடுகளில் கௌரவிக்கப்பட்டவர்.