பலூஜா நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ் தீவிரவாதிகள் உயிரிழப்பு

அண்மையில் இராக் அரசு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்ட பலூஜா நகரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த பல டஜன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை
Image caption இராக் விமானப் படையினர் போராளிகள் மீது நடத்திய தாக்குதல்

பாலைவனப் பகுதி ஊடாக வாகனங்கள் மூலம் போராளிகள் தப்பிக்க முயற்சி செய்ததாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

சிரியா எல்லைக்கு அருகே ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்துக்கு அவர்கள் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால், தீவிரவாதிகள் தப்பிச் செல்ல எத்தனிக்கையில் அவர்களை இலக்கு வைத்து, இராக் விமானப் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானங்கள் ஆகியவை தொடர்ந்து வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளன.