பிரபல கிட்டார் வாசிப்பாளர் ஸ்காட்டி மூர் மரணம்

எல்விஸ் பிரெஸ்லியின் ஆரம்ப இசைக்குழுவின் உறுப்பினரும், ராக் கிட்டார் வாசிப்பில் முன்னோடியுமான ஸ்காட்டி மூர் காலமானார். அவருக்கு வயது 84.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஸ்காட்டி மூர்

பல மாதங்களாக மோசமான உடல்நிலையால் பாதிக்கப்பட்டிருந்த மூர், நாஷ்வில் நகரில் இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

ப்ளுஸ், காஸ்பல் மற்றும் நாட்டுப்புற இசை ஆகியவற்றின் புதிய இசைக்கலவையை எல்விஸ் வடிவமைக்க உதவியவராக மூர் கூறப்படுகிறார். இந்த இசை 'ராக் அண்ட் ரோல்' என்று பின்னர் அறியப்பட்டது.

எல்விஸ் பிரெஸ்லி இசையுலகின் 'அரசனாக' மாற உதவிய இசையமைப்பாளர் ஸ்காட்டி மூர், என்று சிலர் மூரை வர்ணிப்பதுண்டு.

எல்விஸின் முதல் வெற்றி பாடலான ''தட்ஸ் ஆல் ரைட்''டில் (That's All Right) கிட்டார் வாசித்த மூர், சிங்கிள்ஸ் பாடல்களாக ''ஹார்ட்பிரேக் ஹோட்டல்'' மற்றும் '' ஹவுண்ட் டாக்'' போன்றவற்றிலும் பங்குபெற்றார்.

எல்விஸ், பாஸ் கிடார் கலைஞர் பில் பிளாக் மற்றும் தயாரிப்பாளர் சாம் பிலிப்ஸ் ஆகியோர் அடங்கிய இசைக்குழுவில் இது வரை உயிரோடிருந்தது ஸ்காட்டி மூர் மட்டுமேயாகும்.