குறைபாடுகள் கொண்ட 5 லட்சம் கார்களை திரும்பப் பெற போவதாக டொயோட்டா நிறுவனம் அறிவிப்பு

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, கார்களில் விபத்துக்களிலிருந்து காத்துக்கொள்ள பயன்படும் காற்றுப் பைகளில் குறைபாடு கொண்ட அமெரிக்காவில் உள்ள சுமார் அரை மில்லியன் வாகனங்களை திரும்பப்பெற போவதாக அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த குறைபாடு காற்றுப் பைகளை அரைகுறையாக வீங்கச் செய்யும், ஆகையால் விபத்துகளில் காயங்கள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது அதில் கலப்பு வாகனமான பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களும் அடங்கும்.

இந்த மிகப்பெரிய வாகன நிறுவனம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள பல சம்பவங்களில் இதுவே மிகச் சமீபத்திய நிகழ்வாகும்.

இந்த சமீபத்திய தவறுகள் தொடர்பாக விபத்துக்கள் ஏதும் நடைபெற்றதாக தாங்கள் அறிந்திருக்கவில்லை என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.