"மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மீன்பிடி துறையில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும்"

  • 29 ஜூன் 2016

மேற்கு ஆப்ரிக்க நாடுகள், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை காக்க அவைகளுக்கு சொந்தமான மீன்பிடிதுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவைகளின் கடற்கரையில் மீன் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னணி ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான, அறிவிக்கப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத மீன்பிடியால் ஒரு வருடத்திற்கு குறைந்தது 1.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மீன்களை விற்பனை செய்யும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பது பெரும்பாலும் தவறாக அமைந்துவிடுகிறது என வெளிநாட்டு மேம்பாட்டுக் கழகம் (The Overseas Development Institute) தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு சொந்தமான உள்நாட்டு நிறுவனங்களுக்கு மீன்பிடி மற்றும் ஏற்றுமதி உரிமையை வழங்குவதன் மூலம் 3,00,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என நம்பப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.