லண்டனில் விற்பனைக்கு வரும் மிகப் பெரிய கச்சா வைரம்

  • 29 ஜூன் 2016

உலகின் மிகப் பெரிய கச்சா வைரம் லண்டனில் இன்று விற்பனைக்கு வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty

ஒரு டென்னிஸ் பந்தின் அளவு உள்ள அந்த வைரம், 1,109 காரட் ஆகும். இது கடந்த நவம்பர் மாதம் போட்ஸ்வானாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இவ்வளவு பெரிய கச்சா வைரம் இதுவரை பொது ஏலத்திற்கு வைக்கப்பட்டது இல்லை; பொதுவாக இந்த மாதிரியான வைரங்கள், ரகசிய ஏலத்தில், சீல் வைக்கப்பட்ட கவர்களில், அதிகப்படியாக விலைதர முன்வரும் தனி நபர் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும்.

இந்த “லெசிடி லா ரோனா” வைரம் 70 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் போட்ஸ்வானா அரசுக்கு 60% லாபம் கிட்டும்.

1905 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் க்யுல்லினான் வைரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரியது.

அது 9 கற்களாக வெட்டப்பட்டது, அந்த வெட்டப்பட்ட கற்களில் பெரியதான 'கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா' என்று அழைக்கப்படும் கல், லண்டன் டவரில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் அரசியின் செங்கோலில் பதிக்கப்பட்டுள்ளது.