பிரிட்டனின் தொழிற்கட்சியில் யூதர்களுக்கு எதிரான போக்கா? விசாரணை முடிவுகள்

  • 30 ஜூன் 2016

பிரிட்டனின் தொழிற்கட்சியில், யூதர்களுக்கு எதிரான மனப்போக்கு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் விசாரணையில் அக்கட்சியில் வெறுப்பு மற்றும் அறியாமையால் ஏற்படும் அணுகுமுறைகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாக விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty

சில சமயங்களில் கட்சிக்குள் சூழல் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்றாலும் அது யூதர்களுக்கு எதிரான போக்கால் மூழ்கிவிடவில்லை என விசாரணை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பின், விசாரணையின் முடிவுகள் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இனவாதம் என்று எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்டன் மற்றும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் யூதர்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த விசாரணை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.