ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

700 ஐஎஸ் வாகனங்கள் மீது வான் தாக்குதல்; நூற்றுக்கணக்கானவர் பலி

  • 30 ஜூன் 2016

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் வாகனத்தொடரணி மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் வான் தாக்குதலின் காட்சிகளை இராக்கிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவர்கள் ஃபலூஜா நகரிலிருந்து தப்பி ஓட முயன்றதாகவும் அதன்போதே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

சுமார் பதினோறு கிலோமீட்டர் தொலைவு நீடித்த இந்த வாகனத்தொடரில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்தன.

இதில் நூற்றுக்கணக்கான ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் ஏற்றப்பட்ட பல வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் இராக் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.