எகிப்தில் காப்டிக் பாதிரியரை சுட்டுக் கொன்றதாக ஐ.எஸ் அமைப்பு அறிவிப்பு

  • 30 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Reuters

எகிப்தின் வடக்கு சைனாயில் காப்டிக் பாதிரியர் ஒருவரை தங்கள் அமைப்பினர் கொன்றுவிட்டதாக ஐ.எஸ் அமைப்பின் எகிப்திய குழு தெரிவித்துள்ளது.

அந்த பாதிரியார் இஸ்லாமுக்கு எதிராக இருந்ததால் ஐ.எஸ் துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டு கொன்றதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

ரஃபேல் மூஸா என்ற அந்த பாதிரியர், எல் அரிஷ் என்ற நகரில் அவருடைய பழுதான கார் சீர் செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக சைனாயில் பாதுகாப்புப் படையினரை எதிர்த்து சண்டையிட்டு வரும் தீவிரவாதக் குழுவானது 2014ல் ஐ.எஸ் அமைப்பின் விசுவாசியாக தன்னை அறிவித்துக் கொண்டது.

அதிலிருந்து எகிப்தில் அந்த அமைப்பு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

எகிப்து மக்கள் தொகையில் காப்ட் பிரிவை சேர்ந்தவர்கள் 10 சதவீதமாக உள்ளார்கள்.