இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்?

இஸ்தான்புல் பிரதான விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியவர்கள், ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சி.சி.டிவியில் பதிவான தாக்குதலாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர்.

நாற்பதுக்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய அந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமியவாத நாடு என்ற தீவிரவாதக் குழு உள்ளதாக, துருக்கி அரசும், அமெரிக்க அதிகாரிகளும் நம்புகிறார்கள்.

தாக்குதலை அடுத்து, இஸ்தான்புல் நகரிலும், கற்கரை நகரமான இஸ்மீரிலும் போலிசார் தொடர் சோதனை நடத்தினார்கள். அதில், 13 பேரைத் தடுத்து வைத்து விசாரிக்கின்றனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்.

இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.