கிழக்கு ஆப்ரிக்க தேசிய ஊடக குழுவின் முக்கிய நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு

கிழக்கு ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான தேசிய ஊடக குழு, அதன் முக்கிய மையங்கள் சிலவற்றை மூடவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

இந்த நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். வியாழக்கிழமை காலை பணிக்கு வந்தவர்களி்ல், வேலையிழந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

மூன்று வானொலி நிலையங்களையும், ஒரு தொலைக்காட்சி சேனலையும் மூடப் போவதாக அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நேஷன் மீடியா குழுமம், நவீனமயமாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், டிஜிடல் ஊடகத்தில் கவனம் செலுத்தப்போவதாகவும் குறிப்பாக கைப்பேசிகளில் கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

கென்யாவின் மிகப்பெரிய பக்கசார்பற்ற செய்தித்தாள் "தி நேஷன்" மற்றும் இந்தப் பிரதேசம் முழுவதும் பிரபலமான "ஈஸ்ட் ஆப்ரிகன்" ஆகியவை இந்த குழுமத்தால் வெளியிடப்படுகின்றன.

இந்த நிறுவனம் 60 வருடங்களுக்கு முன்பு அகா கானால் தொடங்கப்பட்டது.