லைபீரியாவின் பாதுகாப்பு பணியை மீண்டும் ஒப்படைக்க ஐநா குழு தயார்

லைபீரியா நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை, அந்நாட்டின் ராணுவம் மற்றும் காவல்துறைக்கே திரும்ப ஒப்படைக்கும் பணியினை லைபீரியாவிலுள்ள ஐநாவின் அமைதி காக்கும் பணி குழு (யூஎன்எம்ஐஎல்) தயார் செய்து கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை
Image caption லைபீரியாவில் பணியில் உள்ள ஐநா அமைதி காக்கும் பணி குழு

லைபீரியாவில் நடந்த இரண்டு உள்நாட்டு போர்களில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்த பிறகு, கடந்த 2003-ஆம் ஆண்டு முதல்முறையாக அந்நாட்டில் அமைதி காக்கும் பணி குழு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட லைபீரியா

இந்நிலையில், பாதுகாப்பு பணி வழங்க தங்களை தயார் செய்து கொள்ள லைபீரிய பாதுகாப்பு படையினருக்கு சர்வதேச பயிற்சி அளிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் மாதம், இந்த அமைதி காக்கும் பணி குழுவின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் வரை, மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவில், அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக சில துருப்புக்களை

தொடர்ந்து பணியில் வைத்திருக்கப் போவதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.