விமான நிலைய தாக்குதல் எதிரொலி: தொடர் சோதனையில் ஈடுபட்ட துருக்கி போலிசார்

  • 30 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை AP

கடந்த செவ்வாய் அன்று இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து, துருக்கி போலிசார் தொடர் சோதனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த சோதனையின் விளைவாக, சுமார் 13 பேரை போலிசார் தடுப்பு காவலில் வைத்துள்ளார்கள் எனவும், அதில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்றும் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்தான்புல்லில் பல மாவட்டங்களிலும், கடற்கரை நகரமான இஸ்மிர்லும் போலிசார் முகவரிகளை கொண்டு தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

துருக்கியில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களில் ஒன்றாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.

இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பினரே இந்த விமான நிலைய தாக்குதலுக்குபின் இருப்பதாக துருக்கி மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகிறார்கள்.

Police in Turkey have carried out a series of raids in connection with Tuesday's attack on Istanbul's main airport -- in which at least forty people were killed.

The state-run news agency says thirteen people have been detained - a number are said to be foreign nationals.

Police searched addresses in several districts of Istanbul, as well as in the coastal city of Izmir.

Both the Turkish authorities, and US officials, believe the militant group Islamic State was behind the airport attack - one of the deadliest in Turkey.