லண்டனில் முதலீடா? எச்சரிக்கை என்கிறது சிங்கப்பூர் வங்கி

  • 30 ஜூன் 2016

கடந்த வாரம் பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பின்னர், லண்டனில் உள்ள சொத்துக்கள் மீது கடன் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூரில் உள்ள பெரிய வங்கிகளில் ஒன்றான யூனைடெட் ஓவர்சீஸ் பேங்க் ( யூஓபி) இடைநிறுத்தம் செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை

லண்டனில் உள்ள சொத்துக்கள் மீது கடன் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்த முதல் சிங்கப்பூர் வங்கி இது தான்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிட பிரிட்டன் வாக்களித்த பிறகு ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையினால், தாங்கள் இம்முடிவினை எடுத்ததாக யூஓபி தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்யும் தங்கள் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று தாங்கள் விரும்பியதாக யூஓபி வங்கி மேலும் தெரிவித்துள்ளது.