அரசு உயர் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம்: இரானில் மூன்று வங்கித் தலைவர்கள் மாற்றம்?

  • 30 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Reuters

உயர் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்ததாக எழுந்த மோசடியை தொடர்ந்து குவிந்த புகார்களை அடுத்து இரானில் மூன்று வங்கிகளை சேர்ந்த தலைவர்கள் மாற்றப்படவிருக்கிறார்கள் .

இனி வரும் நாட்களில், மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று மெஹர் என்ற இரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரான் உயர் அதிகாரிகளின் சம்பள விவரங்கள் அடங்கிய ஸ்லிப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியான பிறகு இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

அதில், உயர் அதிகாரிகள் சிலர் அரசின் குறைந்தபட்ச வருவாயைவிட சுமார் 50 மடங்கு அதிகமாக சம்பளமாக பெற்று வந்தது தெரிய வந்ததுள்ளது.

இது, இரானில் மிகப் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தத்தின் பிறகும், பொருளாதார தடைகள் விலக்கப்பட்ட பிறகும் தடுமாற்றத்தில் உள்ள இரானின் பொருளாதாரம் எவ்வித தெளிவான லாபங்களையும் அடைந்ததாகத் தெரியாத நிலையில் இந்த பிரச்சனை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.