ஆஸ்திரியாவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • 1 ஜூலை 2016

ஆஸ்திரியாவில், வலது சாரி சுதந்திரக் கட்சி தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்டு, மே மாதம் நடத்திய அதிபர் தேர்தலை மீண்டும் நடத்த ஆஸ்திரியாவின் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.

வாக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளர் நோபர்ட் ஹோஃபர் முன்னிலை பெற்றதாக தோன்றியது.

ஆனால், தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு வந்த இறுதி முடிவில், மிக சிறிய இடைவெளியில் எதிரணியான பசுமை கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்தார்.

தபால் வாக்குகள் மிகவும் முன்னதாக எண்ணப்பட்டதாகவும் அல்லது அதிகாரபூர்வமற்றோர் அதனை எண்ணியதாகவும் பல முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான சாட்சியத்தை நீதிமன்றம் விசாரித்து இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.