ஜெர்மனியில் மேயரை கொலை செய்ய முயற்சித்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை

  • 1 ஜூலை 2016

ஜெர்மானிய நகரான கலோனின் மேயரை, அவர் தேர்ந்த்தெடுக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் கொலை செய்ய முயற்சித்த ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹென்றியட்டே ரெகெர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், கடைசி நாள் பரப்புரையின்போது ஹென்றியட்டே ரெகெர் கத்தியால் தாக்கப்பட்டு கடும் காயமடைந்தார். அகதிகளை வரவேற்கும் அவருடைய மனப்பான்மையால் தான் அந்த மனிதர் அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.