ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்த திட்டம்

  • 1 ஜூலை 2016

ஹாங்காங் பகுதி, பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 19-வது ஆண்டை ஒட்டி, ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் ஹாங்காங் சாலைகளில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி ஹாங்காங் பிராந்தியம் சீனாவிடம் பிரிட்டனால் ஒப்படைக்கப்பட்டது.

ஹாங்காங்கைச் சேர்ந்த புத்தக வியாபாரி லாம் விங்-கீ, சீனாவின் பிரதான பகுதியில் பல மாதங்கள் தான் உளவியல் ரீதியான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் கூறியதை அடுத்து, பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், 19-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இன்றைய ஆர்ப்பாட்ட பேரணிக்கு லாம் தலைமை தாங்குகிறார்.

சீன கம்யூனிஸ்ட் தலைவர்களை விமர்சிக்கும் புத்தகங்களை விற்பனை செய்ததாக, லாம் உள்ளிட்ட ஐந்து புத்தக வியாபாரிகளை சீன அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.

ஒரு சிலருக்கு இது கொண்டாட்டங்களை வெளிப்படுத்துவதற்கான நேரமாகப் பார்க்கப்படும் அதே நேரத்தில், ஹாங்காங்கில் ஜனநாயகம் மேம்பாட்டுக்கான நடைமுறைகள் போதிய அளவு இல்லை என்று கூறி, பலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.