ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி

படத்தின் காப்புரிமை RIA Novosti

ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த ஒரு நாட்டையும் சாராத நடுநிலையாளராக கலந்து கொள்ள ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவாவிற்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், யூலியா ஸ்டெப்பநோவா ரியோ போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் ரஷியர் ஆவார்.

அதீத திறமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான யூலியா ஸ்டெப்பநோவாவின் விண்ணப்பதைஏற்று கொண்டதாக உலக தடகள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

2013ல் ஊக்க மருந்து மோசடியில் சிக்கும் வரை, 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் உலகின் முதல் எட்டு வீரர்கள் பட்டியலில் ஸ்டெப்பநோவா இடம்பெற்றிருந்தார்.

ஊக்க மருந்து சர்ச்சை குறித்து அவர் அம்பலப்படுத்திய விஷயங்கள் ரஷியாவில் பரவலாக பரவி இருந்த ஊக்க மருந்துமோசடியை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவியது.

ஒலிம்பிக் போட்டியில் யூலியா கலந்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அனுமதியை முறைப்படி பெற வேண்டும்.