அடுத்த ஆண்டு வரை ரஷியா மீதான தடையை நீட்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

படத்தின் காப்புரிமை RIA Novosti

ரஷியாவுக்கு எதிரான தடைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்துள்ளது.

யுக்ரைனின் கிழக்கு பகுதியில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் மாஸ்கோவின் பங்கு என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்ற நடவடிக்கைகளுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக எதிர்பார்க்கும் மின்ஸ்க் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் நடைமுறையாகுவது வரை இந்த தடை அமுலில் இருக்கும் என அது தெரிவித்திருக்கிறது.

இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதித்துள்ள மாஸ்கோ, பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை ஆதரிப்பதாக கூறுவதை மறுத்து வருகிறது.