பஹ்ரைனில் அரசியல் சீர்திருத்தம்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பஹ்ரைனை வலியுறுத்துமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பராக் ஒபாமா நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சீர்திருத்தத்துக்கு பஹ்ரைன் தயாரா?

தனது நாட்டு மக்களின் நியாயமான குறைகளைத் தீர்க்க முடியாத நிலையில் உள்ள பஹ்ரைனின் தோல்வி, அதன் சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்திவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலில் எதிரணியில் உள்ளவர்களை அடக்கி ஒடுக்கும் பஹ்ரைன் ஆட்சியாளர்களின் நடவடிக்கை, நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்றும், ஈரான் ஆட்டுவித்தபடி அவர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுனி முஸ்லிம் பிரிவினரை ஆட்சியாளர்களாகக் கொண்டுள்ள பஹ்ரைனில், இந்த மாதத் துவக்கத்தில் ஷியா முஸ்லிம் மதத் தலைவர் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. மேலும் , பிரதான ஷியா எதிர்க்கட்சிப் பிரிவுக்குத் தடை விதித்தது.