ஜேரூட்டில் சிரியா அரசு படைகள் நடத்திய வான் வழித் தாக்குதல்களில் 25 பேர் பலியானதாக தகவல்

  • 2 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை Omar Sanadiki Reuters

டமாஸ்கஸின் வடகிழக்கில் போராளிகள் வசமுள்ள ஜேரூட் நகரம் மீது அரசு நடத்திய ஷெல் குண்டு மற்றும் வான் வழித் தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சிரியாவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த பகுதி டஜன் கணக்கான முறை தாக்கப்பட்டதாகவும், பலியானவர்களில் பல மருத்துவ பணியாளர்கள் இருப்பதாகவும் அந்த பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா விமானப்படை விமானி ஒருவர் தன் ராணுவ விமானத்திலிருந்து குதித்த பிறகு ஜேரூட் அருகே பாராசூட் மூலம் தரையை அடைந்தார்.

இஸ்லாமியவாத போராளிகள் அந்த விமானியை சிறைப்படுத்தி கொலை செய்த நிலையில், ஒரு நாள் கழித்து சிரிய அரசு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தீவிரவாதிகளை கண்டிப்பாக தண்டிப்பதாக சிரியா ராணுவம் உறுதியளித்துள்ளது.