கடுமையான போட்டியில் ஆஸ்திரேலிய பொது தேர்தல் முடிவுகள்

இன்று ஆஸ்திரேலியாவில் நடந்த பொது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மிகவும் நெருங்கிய போட்டியாக இருக்கும் என்று ஆரம்ப தேர்தல் முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மால்கம் டர்ன்புல்

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கான ஆதரவு நிலை சற்றே கூடுதலாக இருப்பதாக அறிகுறிகள் தென்படுகின்றன.

தனது கூட்டணி அரசின் சட்ட ரீதியான செயல்திட்டத்தை செனட்டில் உள்ள சுயேட்சை உறுப்பினர்கள் தொடர்ந்து தடுத்து வந்ததால், லிபரல் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல், வழக்கமாக தேர்தல் நடக்க வேண்டிய கால கட்டத்திலிருந்து முன்னதாகவே தேர்தலை நடத்த அழைப்பு விடுத்தார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷோர்டன்

இன்றைய தேர்தலை முடிவுகள் ஆளும் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையை அளிக்காவிட்டால் தான் எடுத்த தேர்தல் முடிவு குறித்து டர்ன்புல் வருந்துவார் என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.