ஆஸ்திரேலிய பொது தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பொது தேர்தலில், அந்நாட்டு மக்கள் வாக்களிக்கத் துவங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

கன்சர்வேடிவ் கூட்டணி அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வாக்கினை பதிவு செய்த பிறகு, தற்போதைய பிரதமரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மால்கம் டர்ன்புல் கூறுகையில், ஒரு நிலையான மற்றும் பெரும்பான்மையான கூட்டணி அரசினை தேர்வு செய்வதற்கு வாக்களிக்க, இது வரை இல்லாத அளவில் ஒரு ஆர்வமான காலம் தற்போது நாட்டில் நிலவி வருவதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவினை பிரிட்டன் எடுத்தது பிரதமர் மால்கம் டர்ன்புல்லுக்கு ஆதாயமளிப்பதாக அமைவதாக உள்ளது. ஆனால், தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷோர்டன் இன்னமும் தன்னால் வெற்றி பெற முடியும் என்று கூறுகிறார்.

தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால், கடந்த மூன்று வருடங்களில் பதவியேற்கும் ஐந்தாவது பிரதமராக ஷோர்டன் இருப்பார்.