பஹ்ரைனில் நடைபெறும் அண்மைய எதிர்மறை முன்னேற்றங்கள் பற்றி அமெரிக்கா கவலை

பஹ்ரைனில் நடைபெறும் அண்மைய எதிர்மறை முன்னேற்றங்கள் என்று அமெரிக்கா கூறுகின்ற விடயங்களில், அது மிகுந்த கவலை அடைந்திருப்பதை வெளிப்படுத்த அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் மன்னரிடம் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை REUTERS
Image caption பஹ்ரைனில் நிகழும் அண்மைய எதிர்மறை முன்னேற்றங்களில் அமெரிக்கா கவலை

சீர்திருத்தம் மற்றும் எதிர்தரப்பினருடன் இணக்கம் மூலம், முறுகல் நிலையை தணிவடைய செய்யும் முக்கியத்துவத்தை பற்றி மன்னர் ஹமாத் பின் இஸா அல் கலிஃபாவுடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption மேலதிக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பெற போராடி வரும் பெரும்பான்மையான ஷியா பிரிவை சுன்னி முஸ்லீம் ஆதிக்க அரசு அழித்து வருகிறது.

மேலதிக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பெற போராடி வரும் பெரும்பான்மை ஷியா பிரிவிவை சேர்ந்த எதிரணியினரை சுன்னி முஸ்லீம் ஆதிக்கத்திலுள்ள அரசு அழித்திருக்கின்றன.

வளைகுடா நாடா பஹ்ரைன் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளமாகும்.