வங்கதேசத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கத்தியால் குத்தப்பட்ட ஹிந்து பூசாரி

  • 2 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை AFP GETTY

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட ஹிந்து பூசாரி மருத்துவனையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக தெற்கு வங்கதேச போலிசார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில், மத சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தும் தொடர் தாக்குதல் சம்பவங்களில் இது சமீபத்தில் நடந்துள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்து கோயில் பூசாரி ஒருவர் கொல்லப்பட்ட பிறகு, சத்கிரா சாதர் பகுதியில் பூசாரி பாபாசிந்து போர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.