டாக்கா தாக்குதல்: முடிவுக்கு வந்த மீட்புப் போராட்டம்

  • 2 ஜூலை 2016

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு கஃபேயில், வெளிநாட்டினர் உள்பட பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை

தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள்,13 பணயக்கைதிகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

விடுக்கப்பட்ட பணயக்கைதிகளில் இலங்கையை சேர்ந்த இருவர் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் என்று மூன்று வெளிநாட்டினர் அடங்குவர்.

முன்னதாக, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் குறைந்தது 20 பேரை துப்பாக்கிதாரிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் கஃபேயைச் சுற்றி ராணுவ கவச வண்டிகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கி வேட்டு சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.

பணயக்கைதிகளில் பல இத்தாலியர்கள் இருக்கிறார்கள். சில ஜப்பானியர்களும் இருக்கலாம் என்று டோக்யோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு , இந்தத் தாக்குதலை தானே நடத்தியதாகக் கூறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை twitter

இந்த உணவகத்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தாக்கிய சுமார் எட்டு இளைஞர்கள் அங்கு வெடிகுண்டுகளை வீசி, உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர்.

குறைந்தது இரண்டு போலிஸ் அதிகாரிகளாவது கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Focus Bangla

வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைப்பூ எழுத்தாளர்கள், ஒரு பாலுறுவு ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் ஆகியோர் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களை அடுத்து இந்தத் தாக்குதல் வருகிறது.

இத்தாக்குதல்களுக்கு இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளே பொறுப்பு என்று குற்றம்சாட்டப்படுகிறது.