ஆய்வு செய்யப்பட இருக்கும் ஈஜிப்ட்ஏர் விமானத்தின் குரல் ஒலிப்பதிவு கருவி

  • 2 ஜூலை 2016

விமானி அறையின் கறுப்புப் பெட்டியான குரல் ஒலிப்பதிவு கருவி, இப்போது ஆய்வு செய்யப்படும் நிலையில் உள்ளதாக ஈஜிப்ட்ஏர் விமான விபத்து பற்றி புலனாய்வு செய்கின்ற எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஈஜிப்ட்ஏர் விமானத்தின் குரல் ஒலிப்பதிவு கருவியில் கூடிய சீக்கிரம் ஆய்வு

பாரிஸில் பழுதுகள் நீக்கப்பட்டப் பின்னர் இந்நிலைமை உருவாகியுள்ளது.

ஈஜிப்ட்ஏர் விமானம் மே மாதம் மத்தியதரை கடலில் விழுந்து 66 பேரை பலி வாங்கியது.

படத்தின் காப்புரிமை Alex Snow Airteamimages.com
Image caption ஈஜிப்ட்ஏர் விமானம் கடலில் விழுவதற்கு முன்னால் புகை ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டாலும் இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை

விமானத்தில் இருந்த இரண்டு கறுப்பு பெட்டிகளில் இந்த குரல் ஒலிப்பதிவு கருவி ஒன்றாகும்.

இன்னொன்றில் ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் விபத்து ஏற்படுவதற்கு முன்னால் புகை எழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புகை ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.