பிரிட்டன் தொழிற்கட்சி தலைவரை பதவி விலகச் செய்ய தொடரும் முயற்சிகள்

எதிர்கட்சியான பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பினை பதவிலியிருந்து விலகச் செய்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரிட்டன் நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினரில் 80 சதவீதத்தினர் கார்பின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருந்தனர்

பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க செய்யும் பரப்புரையில் போதியளவு கடுமையாக கார்பின் ஈடுபடவில்லை என்று கட்சியின் சில உறுப்பினர்களால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்திலுள்ள அவருடைய சகாக்களின் 80 சதவீதத்தினர் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அவருடைய சில இடது சாரி கொள்கைகளை கடைபிடிப்பதாக உறுதி கூறிவிட்டு, அதற்கு ஈடாக கார்பினை பதவி விலகச் செய்வதற்கான திட்டங்களை எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையில் இருக்கும் உறுப்பினர்கள் வகுத்து வருவதாக தெரிகிறது