குழந்தைகள் பிச்சையெடுக்க செனகலில் தடை உத்தரவு

பிச்சையெடுக்கும் குழந்தைகள் தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்று செனகல் அதிபர் மேக்கி சால் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

Image caption செனகலில் குழந்தைகள் பிச்சையெடுக்க தடை

குழந்தைகளை பிச்சையெடுக்க அனுப்புவோருக்கு அபராதமும் சிறைத் தணடனையும் வழங்கப்படுமென அவர் கூறியிருக்கிறார்.

செனகலில் குழந்தைகளை, பெரும்பாலும் சிறுவர்களை, தங்கிப் படிக்கும் பள்ளிகளில் குரான் படிக்க அனுப்புவது பாரம்பரிய நடைமுறையாகும்.

படத்தின் காப்புரிமை

ஆனால், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள், மத ஆசிரியர்களால் பிச்சையெடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு தெருக்களில் தஞ்சம் அடைகிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்னரே குழந்தைகள் பிச்சையெடுப்பதை கட்டாயப்படுத்துவதற்கு செனகல் தடை விதித்திருந்தபோதிலும் அந்த பழக்கம் தொடர்கிறது.