செர்பியாவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர்: ஐவர் பலி, 20 பேர் காயம்

  • 2 ஜூலை 2016

செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்திலுள்ள கஃபேயில், ஆயுதம் தாங்கிய ஒருவர் தனது மனைவி உள்பட 5 நபர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இவரது மனைவியும், மற்றொரு பெண்ணும், வேறு மூன்று நபர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இவர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதில், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் வட கிழக்கு நகரமான செரன்யானினில் நடந்த இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில், மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்பிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியவரின் நோக்கம் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.